கோப்ராபோஸ்ட் புலனாய்வு எதிரொலி
ஐடி கம்பெனிகளுக்கு எதிராக வழக்கு பதிவு

கோப்ராபோஸ்ட் புலனாய்வு எதிரொலி<br/>ஐடி கம்பெனிகளுக்கு எதிராக வழக்கு பதிவு
Updated on
1 min read

கோப்ரா போஸ்ட் இணையதளம் நடத்திய ரகசிய புலனாய்வின் அடிப்படையில், தேர்தல் பிரச்சாரத்தில் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தியதற்காக, சில ஐடி கம்பெனிகளுக்கு எதிராக போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. சட்டத்திற்கு விரோதகமாக, முறையற்ற வகையில் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களை பயன்படுத்தி, மக்களை ஏமாற்றியாதாகக் கூறி, ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாகூர் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த முதல் தகவல் அறிக்கையில், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்காக வேலை செய்த நிறுவனங்களும் அடங்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போலியாக பல கணக்குகளை ஆரம்பித்து, ஒரு குறிப்பிட்ட நபரின் பின்னால் பல அபிமானிகள் இருப்பது போலவும், அவரது எதிராளிகளைப் பற்றிய அவதூறான செய்திகளை பரப்புவதும் இவர்கள் செயல்பாடுகளில் ஒன்று. இதனால், ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகளுடன் விளையாடுகின்றனர். இதோடு வெறுப்பை உமிழும் வீடியோக்களையும், தகவல்களையும் பரப்பி, சில நேரங்களில் கலவரம் நடக்கவும் காரணமாக இருந்துள்ளனர் என்று தாக்கூரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும், மக்கள் பிரதிநிதிதுவ சட்டங்களின் அடிப்படையில், இந்த முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in