இலவச சிகிச்சையளிக்க மறுப்பு: 5 மருத்துவமனைகளுக்கு ரூ.600 கோடி அபராதம்

இலவச சிகிச்சையளிக்க மறுப்பு: 5 மருத்துவமனைகளுக்கு ரூ.600 கோடி அபராதம்
Updated on
1 min read

டெல்லியில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க மறுத்த 5 மருத்துவமனைகளுக்கு ரூ.600 கோடி அபராதம் விதிக்கப்பட் டுள்ளது.

தலைநகர் டெல்லியில் ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் இருதய மருத்துவமனை, மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சாந்தி முகுந்த் மருத்துவமனை, தரம்ஷிலா புற்றுநோய் மருத்துவ மனை மற்றும் புஷ்பவதி சிங் கானியா மருத்துவமனை ஆகிய 5 மருத்துவமனைகளும் மிக பிரபலமானவை. இந்த மருத்துவ மனைகளுக்கு 1960 மற்றும் 1990 காலக்கட்டத்தில் சலுகை விலையில் அரசு நிலம் வழங்கியது. இதற்காக ஏழைகளுக்கு இலவச மாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்டு, அரசின் சலுகை விலையில் நிலத்தை வாங்கிக் கொண்ட இந்த 5 மருத்துவ மனைகளும், நிபந்தனையை மதிக் காமல் ஏழைகளிடம் சிகிச்சைக்கு பணம் வாங்கி வருவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து அந்த மருத்துவ மனைகள் மீது அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் ஹேம் பிரகாஷ் கூறியதாவது:

கடந்த ஆண்டு டிசம்பரில் விளக்கம் கேட்டு 5 மருத்துவமனை களுக்கும் அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் எந்த மருத்துவமனையும் ஏழை களுக்கு ஏன் இலவச சிகிச்சை அளிக்கவில்லை என்ற காரணத்தை விளக்கவில்லை. இதையடுத்து 5 மருத்துவமனைகள் மீதும் நட வடிக்கை எடுக்க தீர்மானிக்கப் பட்டது.

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை வழங்காமல் ஏமாற்றும் மருத்துவ மனைகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கக் கோரி 2007-ல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந் தது. இது தொடர்பாக உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப் படையாக கொண்டு, 5 மருத்துவ மனைகளுக்கும் ரூ.600 கோடி அபராதம் விதித்துள்ளோம். இந்த தொகையை வரும் ஜூலை 9-ம் தேதிக்குள் மருத்துவமனை நிர் வாகங்கள் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான நட வடிக்கை பாயும் என்றும் எச்சரித் துள்ளோம். இவ்வாறு ஹேம் பிரகாஷ் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in