

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்தகுமார் நேற்று கூறியதாவது: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, மக்களவையில் 114 சதவீதம் அளவுக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களவையைப் பொறுத்த வரையில் 92 சதவீத பணிகள் நடந்துள்ளன. மக்களவையில் 23 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநிலங்களவையில் 14 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இரு அவைகளிலும் சேர்த்து 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாடாளுமன்ற வரலாற்றில் இந்தக் கூட்டத்தொடர்தான் மிக பயனுள்ளதாக அமைந்தது என்றார்.