

ஜம்மு காஷ்மீரில் இடைவிடாத மழை மற்றும் பனிப் பொழிவால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 நாட் களாக சமவெளிப் பகுதிகளில் பருவம் தவறிய பனிப்பொழிவும் இடைவிடாத மழையும் காணப் படுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஆறுகள், ஓடைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.
இதனால் நேற்று முதல் திங்கள்கிழமை வரை பள்ளி களுக்கு விடுமுறை அளிக்கப்பட் டுள்ளது. ஆறுகள், ஏரிகளில் வெள்ளத்தின் அளவைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு வெள்ளம் கட்டுப்பாட்டுத் துறை தனது ஊழியர் களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் இன்றுமுதல் வானிலையில் முன் னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.