இந்திய திரைப்படங்கள் மீதான கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்

இந்திய திரைப்படங்கள் மீதான கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு  இந்தியா வலியுறுத்தல்
Updated on
1 min read

இந்திய திரைப்படங்கள் மீதான கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவில் தயாராகும் டி.வி. தொடர்கள், திரைப்படங்களை பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பக்கூடாது. இவை ஒப்பந்தம் சாராதவை பட்டியலில் உள்ளவை என்று பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்று செவ்வாய்க்கிழமை கட்டுப்பாடு விதித்தது.

இது தொடர்பாக மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

திரைப்படங்களும் டிவி தொடர்க ளும் எண்ணத்தின் வெளிப்பாடு,. எண்ணத்துக்கு யாரும் தடை விதிக்க முடியாது என்பதை பாகிஸ்தான் தேசபக்தர்கள் உணரவேண்டும்.

ஒப்பந்தம் சாராதவை என தாம் வகுத்துள்ள பட்டியலில் இருந்து இவற்றை முடிந்த விரைவில் பாகிஸ்தான் நீக்கவேண்டும் என்று திவாரி தெரிவித்துள்ளார்.

தற்போதைய இரு தரப்பு வர்த்தக நிர்வாக நடைமுறையின்படி இந்திய தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் ஒப்பந்தம் சாராதவை பட்டியலில் சேர்க்கப்படவேண்டியவை என லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதி காலித் மகமுத் கான் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதுடன், வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களை ஒளிபரப்பவும் தடை விதித்தார். ஒப்பந்தம் சாராதவை என பாகிஸ்தான் வைத்துள்ள எதிர்மறை பட்டியலில் இந்திய திரைப்படங்கள் சேர்க்கப்பட் டுள்ளன. சட்டவிதி ஒழுங்குமுறை ஆணை பிறப்பித்து இந்த பட்டியலை மாற்றிவிட முடியாது எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in