

இத்தாலியைச் சேர்ந்தவர் செல்னி டொலோராஸ், 72 வயது மூதாட்டி. சாய்பாபாவின் தீவிர பக்தர். இதனால் தனது பெயரை சாய் துர்கா என மாற்றிக் கொண்டார். தவிர கடந்த 9 ஆண்டுகளாக மாதம் தவறாமல் ஷீரடிக்கு வந்த சாய்பாபாவை தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில் ரூ.28 லட்சம் மதிப்பில் 855 கிராமில் அழகிய கற்கள் பதிக்கப்பட்ட தங்க கிரீடத்தை சாய்பாபாவுக்கு அவர் காணிக்கையாக வழங்கியுள்ளார். அத்துடன் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்க கவசம் சார்த்தப்பட்ட ருத்ராட்சத்தையும் வழங்கியுள்ளார்.
செல்னி கூறும்போது, ‘‘இத்தாலி யில் மிகப் பெரிய சாய்பாபா கோயிலை கட்ட திட்டமிட்டுள்ளேன். கோயில் கட்டுமானத்துக்கான வரை படம் தயாராகிவிட்டது’’ என்றார்.