Published : 11 Jan 2014 05:23 PM
Last Updated : 11 Jan 2014 05:23 PM

ம.பி. முதல்வரின் திடீர் ஆய்வு: ஆடிப் போன அதிகாரிகள்

மத்தியப் பிரதேசம் முதல்வர் சிவாராஜ்சிங் சவுகான் போபாலில் உள்ள அரசு அலுவலகங்களில் இன்று (சனிக்கிழமை) திடீரென ஆய்வு நடத்தினார்.

முன் அறிவிப்பின்றி திடீரென முதல்வர் ஆய்வு மேற்கொண்டதால் போபால் அரசு அதிகாரிகள் பீதியில் ஆழ்ந்தனர்.

திடீர் ஆய்வின் போது அரசு அலுவலக வளாகத்தில் புகைபிடித்துக் கொண்டிருந்த அதிகாரி ஒருவருக்கு அபராதம் விதித்தார்.

தலைநகர் போபாலில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலைகளை ஆய்வு செய்தார். மண் வெட்டி கொண்டு வரச் செய்து சாலையை கொத்திப் பார்த்தார். சாலை தரம் குறித்து 2 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுச் சென்றார்.

முதல்வரின் இந்த திடீர் ஆய்வு மாவட்ட ஆட்சியருக்குக் கூட முன் அறிவிக்கப்படவில்லை. இதனால் போபாலில் உள்ள அரசு அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், முதல்வர் கோலார் நகரில் உள்ள அரசு அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு வந்திருந்த பிரேம் நாராயன் சிங் என்ற நபர் முதல்வரைக் கண்டவுடன் கட்டுமான அனுமதிக்க அதிகாரி லஞ்சம் கேட்பதாக புகார் கொடுத்தார். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துச் சென்றார்.

முதல்வர் செல்லும் வழியில் ஒரு இடத்திலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தப்படவில்லை.

எளிமையான மனிதராக தன்னை முன்னிலைப்படுத்தியதுடன், வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பிரச்சாரத்தை மேற்கொண்ட சிவராஜ் சிங் சவுகான் மத்தியப் பிரதேசத்தில் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x