

கடல் ஆராய்சிக்கான ஐஆர்என்எஸ்எஸ்-1சி செயற்கைக் கோள், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 16-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான கவுண்ட் டவுன் 13-ம் தேதி தொடங்குகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இந்த வகையில் கடல் ஆராய்ச்சிக்காக ஐஆர்என்எஸ்எஸ்-1சி என்ற மூன்றாவது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக் கோள் இன்று பிஎஸ்எல்வி-சி26 என்ற ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட இருந்தது.
இதனிடையே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதை ஒருவாரம் தள்ளி வைப்பதாக இஸ்ரோ அறிவித்தது. தற்போது இந்தக் கோளாறு சரி செய்யப்பட்டதையடுத்து, வரும் 16ம் தேதி அதிகாலை 1.32 மணிக்கு ஐஆர்என்எஸ்எஸ்-1சி செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான, 67 மணிநேர கவுண்ட் டவுன் 13ம் தேதி காலை 6.32 மணிக்கு துவங்குகிறது. இத்தகவலை, இஸ்ரோ தெரிவித்துள்ளது.
1,425.4 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோள் கடல் ஆராய்ச்சி, பேரிடர் மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.