

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு கடந்த டிசம்பர் 24 முதல் 27-ம் தேதி வரை ரூ.3.53 கோடி பக்தர்களால் காணிக்கையாக அளிக்கப்பட் டுள்ளது.
இதுதொடர்பாக கோயிலின் தலைமை கணக்காளர் டி.ஆர். ஜிர்பி கூறும்போது, “டிசம்பர் 24 முதல் 27 வரை ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர். அதன்மூலம் ரூ.3.53 கோடி, 3,481 கிராம் தங்கம், 10 கிலோ வெள்ளி பக்தர்களால் காணிக்கை வருவா யாக கிடைத்துள்ளது” என்றார்.
புத்தாண்டு தினமான நேற்றும் அதிக அளவிலான பக்தர்கள் கோயி லுக்கு வருகைபுரிந்தனர்.