

மும்பையின் மெரைன் டிரைவ் கடற்கரை பகுதியில் நிறுவப்பட்ட கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் கல் ஓவியம் அகற்றப்பட்டது.
மும்பை நகரை அழகுப் படுத்தும் பணியில் ஆர்பிஜி கலை அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது. இதற்காக திறமை வாய்ந்த கலை ஞர்களை கெண்டு கண்கவர் கல் ஓவியங்களை அந்நிறுவனம் தயாரித்து பொது இடங்களில் நிர்மாணித்து வருகிறது. அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் கல் ஓவியத்தை, உலக புராதன பகுதி யாக அறிவிக்கப்பட்ட மும்பையின் மெரைன் டிரைவ் கடற்கரை பகுதியில் நிர்மாணித்தது. இந்த கல் ஓவியம் கடல் அழகை மறைப்பதாகவும், புராதன பெருமையை கெடுப் பதாகவும் கூறி பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதையடுத்து சச்சின் டெண்டுல் கரின் கல் ஓவியத்தை அப்பகுதியில் இருந்து அகற்றும்படி மும்பை மாநகராட்சி சார்பில் ஆர்பிஜி அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அறக்கட்டளையின் துணைத் தலைவர் சுமீத் சாட்டர்ஜி கூறும்போது, ‘‘மாநகராட்சியிடம் ஒப்புதல் பெற்றபின் சச்சின் கல் ஓவியம் வேறு இடத்தில் நிர்மாணிக் கப்படும். ஏற்கெனவே சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டோம்’’ என்றார்.