

பாகிஸ்தான் கொடுத்த மரண தண்டனையை நிறுத்தி வைக்க சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷன் யாதவ் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே இதற்காக பெற்ற தொகை ரூ.1 மட்டுமே.
சஞ்சீவ் கோயல், தனது ட்வீட்டில் குறைந்த கட்டணத்துக்கு நல்ல திறமையான வழக்கறிஞரை இந்தியா நியமித்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதில் ட்வீட் செய்திருந்த சுஷ்மா ஸ்வராஜ், “இது நியாயமற்ற விமர்சனம். இந்த வழக்கிற்காக ஹரீஷ் சால்வே 1 ரூபாய்தான் கட்டணமாகப் பெற்றார்” என்றார்.
சர்வதேச நீதிமன்ற விசாரணையில் குல்பூஷன் ஜாதவுக்கும் இந்திய அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தியக் கடற்படையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு குல்பூஷன் ஜாதவ் இரானில் தொழில் புரிந்து வந்தார். அவரை அங்கிருந்து கடத்தியுள்ளனர் என்று இந்தியா வாதாடியது.
திங்களன்று இந்தியா, பாகிஸ்தான் இருதர்ப்பு வாதத்தையும் சர்வதேச நீதிமன்றம் கேட்டது.