

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக காஷ்மீர் போலீஸ்காரர் குர்ஷித் ஆலம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பி.கணேஷ், எம். செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ரூ.35 கோடி மதிப்புள்ள 10 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை பிப்ரவரி 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
“பாகிஸ்தானின் அபோடாபாத்தைச் சேர்ந்த ஹில்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயாஸ், காஷ்மீர் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் போதைப்பொருள்களை கடத்துவதாகவும் அதன் மூலம் கிடைக்கும் பணம் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு அளிக்கப்படுகிறது” என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த போதை கடத்தல் கும்பலின் மூளையாகச் செயல்படும் அலி, குவைத்தில் பதுங்கி இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.