

கடும் அமளிக்கு இடையே தெலங்கானா மசோதா மக்களவையில் உறுப்பினர்கள் விவாதத்திற்காக தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய உள் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, ஆந்திர மாநில மறுசீராய்வு மசோதாவை தாக்கல் செய்தார், ஆனால் அப்போதும் சீமாந்திரா எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கடும் கோஷம் எழுப்பினர்.
முதல் முறையாக தெலங்கானா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கோஷம் எழுப்பினர்.
ஆந்திர பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு முறையான விவாதகம் நடத்தப்படாமல் மசோதா நிறைவேற்றப்படக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
இருப்பினும், மசோதா மீது எந்த ஒரு விவாதமும் நடத்த முடியாத அளவிற்கு உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.