

மத்திய தொழிலாளர் மற்றும் பணிநியமனத் துறை அமைச்சர் சிஸ் ராம் ஓலே இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 86.
காங்கிரஸின் மூத்த தலைவரான சிஸ் ராம் ஓலே இதயகோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல்நிலைப் பிரச்சினைகளால் நீண்ட காலமாக அவதியுற்று வந்தார்.
குர்காவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.
இவர் தனது கடைசி காலத்தில் மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வாழ்ந்து வந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவரான சிஸ் ராம் ஓலே, 1996-ல் இருந்து வெவ்வேறு காலக்கட்டத்தில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றவர் ஆவார்.