

நாட்டில் விஐபி கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர்கள், முதல்வர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரின் காரில் சிவப்பு சுழல் விளக்கைப் பயன்படுத்த கடந்த மே 1-ம் தேதி முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், காவலர் வாகனங் களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ மகேஷ் திரிவேதி தனது காரில் சிவப்பு சுழல் விளக்குடன் வலம் வந்துள்ளார். இதுதொடர்பாக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுதொடர்பாக அவர் கூறுகை யில், ‘விமான நிலையத்தில் இருந்து வந்துபோது எனது கார் சேதமடைந்தது. இதனால் அவ்வழி யாக வந்த சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய காரில் ஏறி முதலமைச்சர் வீட்டில் இறக்கிவிடு மாறு கூறினேன்’ என்றார்.