

பாதுகாப்புத் துறையில் தன்னி றைவு பெற வேண்டுமானால் ராணுவ தளவாடங்களை உள் நாட்டிலேயே தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் சார்பில் கர்நாடக மாநிலம் துமகூறு மாவட்டம் பிதர் ஹல்ல கவால் பகுதியில் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் உரு வாக உள்ள ஹெலிகாப்டர் தொழிற் சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது:
நமது ராணுவ வீரர்கள் நாட் டுக்காக எவ்வித தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளனர். ஆனால், அவர்கள் பயன்படுத்தும் கருவிகள் மற்றும் ஆயுதங்கள் உலகிலேயே மிகச் சிறந்ததாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது.
ராணுவத்துக்காக ஏராள மான ஆயுதங்கள் வெளிநாடுகளி லிருந்து நாம் இறக்குமதி செய்கி றோம். அவை விலை உயர்ந்த வையாக உள்ளதால் இதற்காக கோடிக்கணக்கான பணம் செல வாகிறது. அதேநேரம் அவை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தாக இல்லை. எனவே, ஆயுத இறக்குமதி தொடர்பாக வெளி நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந் தம் போடும்போது, இந்தியாவில் உற்பத்திப் பிரிவை தொடங்க வேண்டும் என வலியுறுத்த வேண் டும்.
குறிப்பாக, பாதுகாப்புத் துறை யில் தன்னிறைவு பெற வேண்டு மானால், நமது ராணுவத்துக்கு தேவையான ராணுவ தளவாடங் களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.