

பெங்களூருவில் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த எழுத்தாளர் க.சீ.சிவகுமாரின் உடல் நேற்று மாலை அவரது சொந்த ஊரான கன்னிவாடியில் அடக்கம் செய்யப் பட்டது.
திருப்பூர் மாவட்டம் கன்னிவாடி கிராமத்தை சேர்ந்த சிவகுமாரின் இயற்பெயர் கன்னிவாடி சீரங்க ராயன் சிவகுமார். சின்ன தாரா புரத்தில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், சிறுவயதில் இருந்தே கதை, கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வமுடன் திகழ்ந்தார். எழுத்தின் மீதான தீரா காதலால் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்துடன் இணைந்து திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி சென்னைக்கு இடம்பெயர்ந்த சிவகுமார் விகடன், தினமலர் உள்ளிட்ட பத்திரிகைகளில் சில ஆண்டுகள் பத்திரிகையாளராக பணியாற்றினார்.
குறுகிய காலத்தில் 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி யுள்ள க.சீ.சிவகுமார், 'கன்னிவாடி, ஆதிமங்கலத்து விசேஷங்கள், குணச்சித்திரங்கள், உப்புக்கடலை குடிக்கும் பூனை, க.சீ.சிவகுமார் குறுநாவல்கள்' உள்ளிட்ட நூல் களை வெளியிட்டுள்ளார். சிறந்த சிறுகதைக்காக ‘இலக்கிய சிந்தனை விருது' பெற்றுள்ள சிவகுமார், சில திரைப்படங்களின் கதை ஆக்கத்தி லும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
பணி நிமித்தமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் குடியேறிய இவர், தனது மனைவி சாந்தி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சிவகுமார் மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதனால் படுகாய மடைந்த அவரை, மனைவி சாந்தி அருகிலுள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பி.டி.எம்.லே அவுட் போலீ ஸார் சிவகுமாரின் உடலை மீட்டு, விக்டோரியா மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப் பினர். நேற்று பிற்பகல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சிவ குமாரின் உறவினர்களிடம் வழங்கப் பட்டது. அப்போது எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, பாலசுப்ர மணியம், செந்தில், வா. மணிகண் டன் உள்ளிட்ட பலர் அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து சிவகுமாரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான கன்னிவாடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும் அவரது உடலுக்கு எழுத்தாளர்கள் கா.பாலமுருகன், பாஸ்கர் சக்தி, அ.முத்துகிருஷ்ணன், ஒளிப்பதிவா ளர் தேனி ஈஸ்வர் மற்றும் ஏராள மான எழுத்தாளர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதை யடுத்து சிவகுமாரின் உடல் சொந்த மண்ணில் அடக்கம் செய்யப் பட்டது.