

உத்தரப் பிரதேச சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி சார்பில், 10 அம்ச குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை முதல்வர் அகிலேஷ் யாதவும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நேற்று வெளியிட்டனர்.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந் தது. மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸு டன் கூட்டணி வைத்து போட்டி யிடுகிறது. இக்கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சமாஜ்வாதி காங்கிரஸ் சார்பில் 10 அம்ச குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை அகிலேஷ் யாத வும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் இணைந்து நேற்று வெளியிட்ட னர். லக்னோவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் குறைந்தபட்ச செயல் திட்டங் களை இருவரும் வெளியிட்ட னர். இதில் இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள மிக முக்கியமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அவற்றில் இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன், 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயி களுக்கு கடன் தள்ளுபடி, குறைந்த கட்டணத்தில் மின்சாரம், ஒரு கோடி ஏழை குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ.1000 ஓய்வூதியம், நகர்ப்புற ஏழைகளுக்கு ரூ.10-க்கு ஒருவேளை உணவு, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக் கீடு, 5 ஆண்டுகளில் ஒவ் வொரு கிராமத்துக்கும் சாலை, மின்சாரம், தண்ணீர் வசதி போன்றவை இடம்பெற்றுள் ளன.
இதுகுறித்து அகிலேஷ் கூறும்போது, ‘‘சமாஜ்வாதி கட்சியினர் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவார்கள். ஆனால், சிலர் (பிரதமர் மோடி) ‘மனதில் இருந்து’ சொல்வதாக கூறுவார்கள். ஆனால், எதையும் செய்ய மாட்டார்கள். ‘இரண்டு குடும்பத்தினர் கூட்டணி வைத்துள்ளதாக பாஜக.வினர் கூறுகின்றனர். ஆனால், 2 இளைஞர்கள் ஒன்றாக இணைந்து வந்துள்ளோம். சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தேர்தல் அறிக்கை மற்றும் 10 அம்ச குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை நிறைவேற்று வோம்’’ என்றார்.