Published : 03 Sep 2014 12:31 PM
Last Updated : 03 Sep 2014 12:31 PM

ஆண்மை பரிசோதனைக்கு உட்பட நித்யானந்தாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆண்மை பரிசோதனைக்கு உட்படும்படி கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

2010-ல் நடந்ததாக கூறப்படும் பாலியல் பலாத்கார வழக்கில் ஆண்மை பரிசோதனைக்கு உட்படு வது அவசியம் என்று நீதிபதி பிரகாஷ் தேசாய் தலைமையிலான அமர்வு கூறியது. இந்த வழக்கில் நித்யானந்தாவுக்கு தனியாக நிவாரணம் எதுவும் வழங்க முடி யாது என்றும் அமர்வு தனது உத்தர வில் கூறியுள்ளது.

பலாத்கார வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆண்மை பரிசோதனை அவசியமா கிறது. எனவே இந்த சோதனைக்கு உள்ளாக நித்யானந்தா தயங்குவது ஏன் என்று ஆகஸ்ட் 20-ம் தேதி நடந்த வழக்கு விசாரணையில் இந்த அமர்வு கேள்வி எழுப்பியிருந்தது.

பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை ஆண்மை பரி சோதனைக்கு உட்படுத்தக் கூடாது என்பதில் அர்த்தமே இல்லை என்று அப்போது தெரிவித்த நீதிபதி கள், 2010-ம் ஆண்டு வழக்கில் இதுவரை பரிசோதனை நடத்தாமல் போலீஸார் தாமதம் செய்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.

நித்யானந்தா மனு மீது ஆகஸ்ட் 21-ம் தேதி விசாரணையை முடித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்து. இந்நிலையில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கி யுள்ளது.

இந்த வழக்கில் நித்யானந்தா, அவரது ஆதரவாளர்கள் 4 பேருக்கு எதிராக ராமநகர் நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்டுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 1-ம் தேதி தடை விதித்தது.

ஆண்மை பரிசோதனைக்காக விசாரணை அதிகாரி முன் ஆஜ ராகும்படியும் ஆகஸ்ட் 18-ம் தேதி ராமநகரம் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜராகும்படியும் நித்யானந் தாவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

தலைமை ஜுடிசியல் மாஜிஸ் திரேட் ஜூலை 28-ம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தாவும் அவரது ஆதரவா ளர்களும் தாக்கல் செய்த மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x