

இமாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 46 பேர் பலியாகினர்.
இந்த விபத்து குறித்து சிம்லாவின் துணை காவல் ஆணையர் ரோகன் சன்ந் தாகூர் கூறும்போது, "உத்தரகண்ட் மாவட்டத்திலிருந்து புறப்பட்ட பேருந்து ஒன்று உத்தரகண்ட் - இமாச்சல பிரதேச எல்லைப் பகுதியில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 46 பேர் பலியாகினர். பேருந்தில் மொத்தம் 56 பயணிகள் பயணம் செய்துள்ளனர், மீதமுள்ள பயணிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார்.
போலீஸார், மீட்புப் படையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளனர்.