வேலைவாய்ப்பை பெருக்க பட்ஜெட்டில் ஏதுமில்லை: காங்கிரஸ்

வேலைவாய்ப்பை பெருக்க பட்ஜெட்டில் ஏதுமில்லை: காங்கிரஸ்
Updated on
1 min read

வேலை வாய்ப்புப் பெருக்கத்திற்கு இந்த பட்ஜெட்டில் எந்த ஒரு ஊக்குவிப்புத் திட்டங்களும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கூறும்போது, “இந்த பட்ஜெட் எதிர்கால விளக்கங்களுக்குரியதே தவிர நடப்பு விவகாரங்களை சீர்தூக்கும் வேலை வாய்ப்புப் பெருக்கத்திற்கான உடனடி ஊக்குவிப்புகள் எதுவும் இல்லை.

துரதிர்ஷ்டவசமாக என்ன செய்யப்பட வேண்டுமோ அது செய்யப்படவில்லை. இன்றைய தேதியில் நம் கண் முன்னால் உள்ள மிகப்பெரிய சவால் வேலை வாய்ப்பு மற்றும் வேளாண் துறை. இவை பற்றி ஒன்றுமே இந்த பட்ஜெட்டில் இல்லை” என்றார்.

மற்றொரு காங்கிரஸ் தலைவர் சசி தரூர் கூறும்போது, “இந்த பட்ஜெட் மிகவும் பொதுவாக, பரந்துபட்ட ஒரு சித்திரத்தை அளிக்கிறது, இவையெல்லாம் எப்படி தகைகின்றன என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்” என்றார்.

மணிஷ் திவாரி கூறும்போது, “பட்ஜெட்டில் கற்பனை வளம் இல்லை. மொத்தமாக பார்த்தால் பொருளாதாரத்தை இந்த பட்ஜெட் பலவீனப்படுத்தவே செய்யும். சந்தை நிலவரங்களும் பட்ஜெட்டுக்கு எதிர்மறையான போக்குகளையே அறிவிக்கிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in