

கர்நாடகாவில் ஷிமோகா மாநக ராட்சியின் மேயராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த தமிழர் ஏழுமலை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழ் அமைப்பினரும் அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாநகராட்சியில் கடந்த 2014-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி மேயர் பதவியை கைப்பற்றியது. 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மேயர், துணை மேயர் உள்ளிட்ட பதவிகளை பங்கிட்டுக் கொள்வதில் காங்கிரஸ் - மஜத கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து மஜத கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமரு மான தேவகவுடா காங்கிரஸ் கூட் டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். எனவே மஜத மாநில தலைவர் குமாரசாமி, பாஜகவின் மாநில தலைவர் எடியூரப்பாவுடம் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கினார். இதில் இரு கட்சிகளிடையே கூட்டணி ஏற்பட்டது.
ஷிமோகாவில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால் அங்கு மேயர் பதவிக்கு மஜத கூட்டணி சார்பில் தமிழரான ஏழுமலை வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் சார்பில் லட்சுமணன் நிறுத்தப்பட்டார்.
இதையடுத்து கடந்த செவ்வாய்க் கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 39 வாக்குகளில் 25 வாக்குகளைப் பெற்று மஜத வேட்பாளர் ஏழுமலை வெற்றி பெற்றார். துணை மேயராக பாஜகவை சேர்ந்த ரூபா லக்ஷ்மண் தேர்வானார்.
தமிழர் ஒருவர் ஷிமோகாவின் மேய ராக வெற்றிபெறுவது இதுவே முதல் முறை என்பதால் அங்குள்ள தமிழர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக தமிழ் அமைப்பினரும் அரசியல் கட்சியினரும் ஏழுமலைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்முறையாக மேயர் பதவிக்கு வந்துள்ள ஏழுமலை, ஷிமோகாவில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏழுமலை, ‘‘எனது பெற்றோர் தமிழகத் தில் உள்ள திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள். தொழில் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்னர் ஷிமோ காவுக்கு குடிபெயர்ந்தனர். ஷிமோகா மாநகராட்சியில் தமிழர்களும், கன்னடர்களும் அதிகளவில் வசிப்பதால் பாரபட்சம் இல்லாமல் பணியாற்றுவேன். நான் வெற்றி பெற உழைத்த மஜத தலைவர்களுக்கும் பாஜக தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.