

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் அன்சிதோரா பகுதியில், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முசாபர் உசைன் அட்டாரா வசித்து வருகிறார். இவரது வீட்டுக்குள் நேற்றிரவு 8.30 மணிக்கு புகுந்த தீவிரவாதிகள் சிலர், அங்கிருந்த போலீஸார் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர். பின்னர் அங்கிருந்த 4 துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டனர். நீதிபதி வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.