

அமெரிக்காவுடன் நெருங்கிய ராணுவ கூட்டு வைத்ததன் மூலம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எல்லையை தாண்டிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பத்திரிகையான ‘பீப்புள்ஸ் டெமாக்கரசி’யின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:
பாதுகாப்பு, உணவுப்பொருள் சில்லரை வர்த்தகம், விமானப் போக்குவரத்து, கேபிள் நெட்வொர்க், டிடிஎச் மற்றும் இதர தொலைத்தொடர்பு சேவை உள்ளிட்ட துறைகளில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு (எப்டிஐ) மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
மேலும் தனியார் பாதுகாப்பு முகமைகளில் 49 சதவீதமாக உள்ள அந்நிய நேரடி முதலீடு 74 சதவீதமாக அதிகரிக்கப் பட்டுள்ளது. மருந்து உற்பத்தித் துறையிலும் 74 சதவீத எப்டிஐ அனுமதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்காக இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் கூட சமரசம் செய்து கொண்டுள்ளது.
இத்தகைய புதிய தாராளமய கொள்கைகளை இந்தியா அமல் படுத்துவதற்கு காரணம், அமெரிக் காவுடன் நெருங்கிய ராணுவ கூட்டு வைத்ததுதான்.
மத்திய அரசின் இந்த நடவடிக் கைகள், இந்தியாவின் இறையா ண்மை மற்றும் சுயமாக முடி வெடுக்கும் திறன் ஆகியவற்றில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.