

இந்திய சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் மீது தீவிரவாதிகள் தாக்கியதில் காயமடைந்த காவலர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்தார்.
தீவிரவாதிகள் ஸ்ரீநகரின் நோவட்டா பகுதியில் நடத்திய தாக்குதலில் காவலர் ரௌஸ் அகமது காயமடைந்தார். காயங்களுடன் போராடிய அவர், இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.
காஷ்மீர், ஸ்ரீநகரின் நோவட்டா பகுதியில் இந்திய சுதந்திர தினத்தன்று பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு மத்திய ரிசர்வ் படை வீரர் பலியானார். இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒன்பது பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.