அமைச்சகங்களின் நிதி அதிகார வரம்பை உயர்த்தியது மத்திய அரசு: ரூ. 500 கோடியாக அதிகரிப்பு

அமைச்சகங்களின் நிதி அதிகார வரம்பை உயர்த்தியது மத்திய அரசு: ரூ. 500 கோடியாக அதிகரிப்பு
Updated on
1 min read

திட்டங்களுக்கு நேரடி ஒப்புதல் அளிப்பதற்கான அமைச்சகங் களின் நிதி உச்சவரம்பை ரூ.150 கோடியிலிருந்து ரூ. 500 கோடியாக உயர்த்தி மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

முன்கூட்டியே திட்டமிடப்படாத திட்டங்களுக்கான மதிப்பீடு ரூ.150 கோடி வரை இருந்தால், அத்திட்டங்களுக்கு துறை அமைச்சரே நேரடியாக ஒப்புதல் அளிக்கலாம். இந்த நிதி உச்சவரம்பு ரூ. 500 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.500 கோடிக்கும் கீழ் உள்ள மதிப்பிலான திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே நேரடியாக ஒப்புதல் அளிக்கலாம்.

ரூ.500 கோடி மற்றும் அதற்கு அதிகமான மதிப்புடைய திட்டங் களுக்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதே சமயம் ரூ. 1,000 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புடைய திட்டங்களுக்கு அமைச்சரவை அல்லது பொருளாதார விவகாரங் களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் தேவைப்படும்.

தற்போதைய நிலையில், ரூ.300 கோடிக்கும் குறைவான மதிப்புடைய திட்டமிடா திட்டங் களை அமைச்சகம் அல்லது தொடர்புடைய அமைச்சகத்தின் நிலை நிதிக்குழு மூலம் மதிப் பிடலாம். திருத்தியமைக்கப்பட்ட விதிகளின்படி, திட்டமிடா செலவு களுக்கான குழு (சிஎன்இ), ரூ. 300 கோடி வரையிலான திட்டங் களை மதிப்பிடலாம். அதன் முந்தைய உச்சவரம்பான ரூ. 75 கோடிக்கும் அதிகமான மதிப் புடைய திட்டங்களையும் மதிப் பிடலாம்.

திட்டமதிப்பீட்டைவிட அதிகரிக் கும் செலவு வீதம் 20 சதவீதம் வரை அல்லது ரூ. 75 கோடி வரை இருப்பின், அதனை நிதி ஆலோசகர் அல்லது நிர்வாகத் துறையின் செயலாளர் மதிப் பிடலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

-ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in