

சத்தீஸ்கர் மாநிலம் அந்தகர் சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளார் போஜ்ராஜ் நாக் வெற்றி பெற்றார்.
சத்தீஸ்கர் மாநிலம் அந்தகர் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வாக்கு எண்ணிக்கை முடிவுற்று நிலையில், பாஜக வேட்பாளர் போஜ்ராஜ் நாக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.