

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று பிற்பகல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இந்திய தரப்பினரும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும், 1 மணி நேரம் தாக்குதல் நடைபெற்றதாகவும் இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் கேப்டன் எஸ்.என்.ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
கடந்த 2003 நவம்பர் மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் துப்பாக்கி சூட்டை நிறுத்திக் கொள்வதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தை அடிக்கடி மீறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் தான், அமெரிக்கா சென்ற பிரதமர் மன்மோகன் சிங், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்து பேசினார். இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.