

கடும் அமளிக்கு இடையே மாநிலங்களவையில் இன்று தெலங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து அமளி நிலவியதால், 30 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து மூன்று முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, தெலங்கானா மசோதாவைத் தாக்கல் செய்தவுடன், தெலங்கானா எதிர்ப்பு உறுப்பினர்களால் மாநிலங்களவையே போர்க்களமானது.
மாநிலங்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு முன்பு வந்த உறுப்பினர்கள் தங்கள் கையில் வைத்திருந்த பதாகைகளை உயர்த்தி அமளியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, தமிழக மீனவர் பிரச்சினையை முன்வைத்து தமிழக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.