

இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.), இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) மற்றும் இந்திய வெளியுறவு பணி (ஐ.எப்.எஸ்.) உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசின் பொது தேர்வாணையத்தின் (யூ.பி.எஸ்.சி.) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
கடந்த ஆண்டு (2016) யூ.பி.எஸ்.சி. தேர்வு மூலம் 1209 பணி யிடங்கள் நிரப்பப்பட்டன. இதுதொடர்பாக மாநிலங் களவையில் எழுத்துப்பூர்வமாக மத்திய பணியாளர் தேர்வாணைய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்தார். அப்போது அவர் பேசும்போது, மத்திய பொது தேர்வாணையத்தின் மூலம் நடப்பாண்டு 980 பணியிடங் களை நிரப்ப முடிவு செய்யப் பட்டுள்ளது.
அதிகாரிகள் பணிநிலை தொடர்பான தகவலின் அடிப்படையில் இந்த எண்ணிக் கைக்கான பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர், என்றார்.
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது நடப்பாண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணியிடங்களுக்குத் தேர்வு செய் யப்படுவர்களின் எண்ணிக்கை 229 குறைவாகும்.