

காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு சாத்தியமான வழிகளை பிரிவினை வாதிகள் கூறியிருக்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கூறினார்.
ஜம்முவில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பாக மெகபூபா பேசிய தாவது:
காஷ்மீர் வந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை பிரிவினைவாதிகள் தவிர்த்திருக்க கூடாது. அவர்களை சந்தித்து காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடைமுறைக்கு சாத்திய மான வழிகளை கூறியிருக்க வேண்டும்.
பேச்சுவார்த்தை வர மறுப்பதன் மூலம், மக்களின் துயரங்களை முடிவுக்கு கொண்டுவருவதில் பிரிவினைவாதிகளுக்கு விருப்பம் இல்லை என்ற செய்தியே பரவும்.
காஷ்மீரில் அனைத்து தரப்பின ரையும் சென்றடையும் வகையில் புதிய மற்றும் ஆக்கப்பூர்மான முயற்சியை நம் நாட்டின் அரசியல் தலைமை எடுக்கும் என நாம் நம்பு வோம். காஷ்மீர் பிரச்சினைக்கு முதல்வர் அல்லது பிரதமரால் மட்டும் தீர்வு கண்டுவிட முடியாது என்பதை என்னை விமர்சிப்பவர்கள் மறந்துவிட்டனர். இதற்கு நாட்டின் அனைத்து மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் கைகோர்ப்பது அவசியம். இதுதவிர பாகிஸ்தான் அணுகுமுறையிலும் மாற்றம் வேண்டும்.