

உத்தரபிரதேச மாநிலம், மொராதா பாத் நகரில் உள்ள ராம்கங்கா நதிக்கரையில் எலெக்ட்ரானிக் கழிவுகள் கொட்டினால், சுற்றுச்சூழல் பாதிப்புக்காக ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) அறிவித்துள்ளது.
இந்த நதிக்கரையில் குவிந்துள்ள கழிவுகளை உடனடியாக அகற்று வதற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவையும் என்ஜிடி தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு அமைத்துள்ளது.
பல்வேறு தொழிற்சாலைகளில் சேகரமாகும் ஆபத்தான எலெக்ட் ரானிக் கழிவுகள் தூளாக்கப்பட்டு, மொராதாபாத் ராம்கங்கா நதிக் கரையில் பெருமளவில் கொட்டப் பட்டுள்ளதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-