

செப்டம்பர் 28 தாக்குதலுக்கு முன்னதான கட்டுப்பாட்டு எல்லையருகே பாகிஸ்தான் பகுதியில் நடத்திய ராணுவத் தாக்குதல்களின் நோக்கமும், இலக்கும் வேறுவேறு என்று முன்னால் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகச் செயல்பட்டவர் சிவசங்கர் மேனன். முன்னர் நடத்தப்பட்ட தாக்குதல்களை வெளிப்படையாக அறிவிக்காததில் வருத்தம் எதுவும் இல்லை காரணம் அவையெல்லாம் வேறுபட்ட நோக்கங்களையும் இலக்குகளையும் கொண்டது என்றார்.
தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு சிவசங்கர் மேனன் தெரிவிக்கும் போது, “பொதுவாக ரகசிய ராணுவ நடவடிக்கைகளை வெளிப்படையாக அறிவிக்கப்படுவதில்லை, ஏனெனில் அது கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் போர் நிறுத்த மீறல்களைக் குறைப்பதாக இருக்கலாம், தீவிரவாத ஊடுருவலை முறியடிப்பதாக இருக்கலாம், ஆனால் உள்நாட்டில் பொதுமக்கள் கருத்தை எதிர்நோக்கி மேலாண்மை செய்வதற்காக அல்ல. வெளிப்படையாகவல்லாமல் ரகசியமாக எல்லைப் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை எடுக்கும் போது பாகிஸ்தான் இறங்கி வந்து ஒரு தற்காலிக அமைதி ஏற்படுத்தப்பட்டது” என்றார்.
இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதல் பற்றிய அரசின் அறிவிப்புக்குப் பிறகே ஏற்பட்ட கடும் விவாதங்கள் என்ற சூழ்நிலையில் சிவசங்கர் மேனனின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
2011-ல் சிவசங்கர் மேனன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த போது நடத்தப்பட்ட ஆபரேஷன் ஜிஞ்சர் பற்றி வெளியிடாமல் இருந்தததற்கு வருந்துகிறீர்களா என்று அவரிடம் கேட்ட போது, “இல்லை! வெளிப்படையாக இத்தகைய நடவடிக்கைகளை அறிவிப்பதென்பது அந்த நடவடிக்கைகளின் பலன்கள் நாம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கிறதா என்பதையும் அந்தக் குறிக்கோளை எட்ட எடுத்த சிறந்த வழியாக இருக்கிறதா என்பதை பொறுத்ததல்ல” என்றார்.
மேலும் அவர் கூறும்போது தீவிரவாதிகளின் ‘உரி’ தாக்குதலுக்குப் பிறகே அதற்கான பதிலடி எதிர்பார்க்கக் கூடியதே. 2003-ம் ஆண்டு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் மற்றும் அப்போதைய பிரதமர் வாஜ்பாயிக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து 10 ஆண்டுகளுக்க்கு தீவிரவாத ஊடுருவல் சம்பவங்கள், பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் கடந்த 18 மாதங்களை ஒப்பிடுகையில் குறைவானதே.
காஷ்மீரில் புர்ஹான் வானி என்கவுண்டருக்குப் பிறகு நடந்த ஆர்பாட்டங்களுக்குப் பிறகே இத்தகைய தீவிரவாத ஊடுருவல்களும் ஊடுருவல் முயற்சிகளும் அதிஅக்ரித்துள்ளது என்கிறார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் 20 ஊடுருவல் முயற்சிகளில் 24 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்ஸ்’ என்ற வார்த்தை பிரயோகம் தவறானது என்று கூறும் சிவசங்கர் மேனன், அது பனிப்போர் காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்டது, அதாவது எதிரி நாட்டின் தலைமையைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்தான் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்றும், “நாமும் பாகிஸ்தானும் செய்வது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்ஸ் அல்ல, இந்த வார்த்தைப் பிரயோகம் குழப்பத்தை விளைவிப்பது, நாம் செய்திருப்பது தந்திரோபாய வியூக ரகசிய தாக்குதல், இது எல்லையில் அமைதியை நிலைநாட்ட பயன்படுத்தப்படுவதே” என்றார்.