

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த 11 வயது பள்ளி சிறுமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் இரு நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அக்கிதத் நவீத் என்ற அந்த சிறுமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்ப தாவது:
மக்கள் மனங்களை வெல்வது மிகுந்த அற்புதமான பணி என்று ஒருமுறை எனது தந்தை என்னிடம் தெரிவித்திருந்தார். மக்கள் மனதை வென்றதன் மூலமே, உ.பி. தேர்தலில் உங்களால் வெல்ல முடிந்துள்ளது. அதே சமயம் இன்னும் நிறைய இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் மனங்களை வெல்ல வேண்டு மென்றால், நீங்கள் இரு நாட்டுக் கும் இடையே நட்பு மற்றும் அமைதி மலர்வதற்கான நடவடிக் கைகளை எடுக்க வேண்டும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நாம் அமைதியை உருவாக்க வேண்டும். நாம் துப் பாக்கி தோட்டாக்களுக்கு பதில் புத்தகங்களை வாங்க வேண்டும். துப்பாக்கிகளை வாங்குவதற்கு பதில் ஏழை மக்களின் உடல்நலம் காக்க மருந்துகளை வாங்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.