

இணையத்தின் மூலம் முக்கியத் தகவல்களைத் திருடும் “ஹேக்கிங்” முயற்சியை சிபிஐ வெள்ளிக்கிழமை முறியடித்தது.
அமெரிக்காவின் உளவு அமைப்பான எப்.பி.ஐ. கொடுத்த தகவல்களின் அடிப்படையில் சிபிஐ இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
அமெரிக்கா மட்டுமல்லாது சீனா, ருமேனியா ஆகிய நாடுகளின் விசாரணை அமைப்புகளுடன் இணைந்து சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான ஹேக்கிங் முறியடிப்பு நடவடிக்கை இது என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
மும்பை, புணே, காசியாபாத் ஆகிய நகரங்களின் பல்வேறு இடங்களில் இருந்து இந்த ஹேக்கிங் முயற்சி நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக புணேயில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தகவல் தொழில்நுட்ப விதிமீறல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் தொடர்புடைய மேலும் பலரை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
எந்த வகையான தகவல்களை திருடும் முயற்சி நடைபெற்றது? இதில் பாதிக்கப்பட்டவர்கள் யார்? இதனால் நிதி இழப்பு ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.