Last Updated : 02 Jan, 2016 08:03 PM

 

Published : 02 Jan 2016 08:03 PM
Last Updated : 02 Jan 2016 08:03 PM

2001 முதல் பஞ்சாபில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள்

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 4 தீவிரவாதிகள், 3 வீரர்கள் பலியாயினர். கடந்த 2001-ம் ஆண்டு முதல் இதுவரை இம்மாநிலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் பற்றிய விவரம்:

2001, மார்ச் 1: குர்தாஸ்பூர் மாவட்டத்தில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில், 405 அடி நீளத்துக்கு சுரங்கப்பாதை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2002 ஜனவரி 1: இமாசலப்பிரதேசத்துடனான பஞ்சாப் எல்லைக்கு அருகே உள்ள தம்டல் என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலியாயினர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

2002 ஜனவரி 31: ஹோஷியர்பூர் மாவட்டம் பத்ரானாவில் மாநில போக்குவரத்துக்கழக பேருந்தில் குண்டு வெடித்ததில் 2 பேர் பலியாயினர், 12 பேர் காயமடைந்தனர்.

2002 மார்ச் 31: பஞ்சாபின் லூதியானாவிலிருந்து 20 கி.மீ.தொலைவில் தரோஹா என்ற இடத்தில் பெரோஸ்பூர்-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்ததில் 2 பேர் பலியாயினர், 28 பேர் காயமடைந்தனர்.

2006 ஏப்ரல் 28: ஜலந்தர் பஸ் நிலையத்தில் ஒரு பஸ்ஸில் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் காயமடைந்தனர்.

2007 அக்டோபர் 14: லூதியானாவில் உள்ள திரையரங்கத்தில் குண்டு வெடித்ததில் 7 பேர் பலியானதுடன் 40 பேர் காயமடைந்தனர்.

2015 ஜூலை 27: குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் காவல் கண்காணிப்பாளர் உட்பட 7 பேர் பலியாயினர். தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x