

செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றிய வழக்கில் மேலும் ஒரு தொழிலதிபரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறும்போது, “டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் யோகேஷ் மிட்டல், ரூ.51 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம்.
இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட டெல்லி வழக்கறிஞர் ரோஹித் தாண்டன், கோட்டக் மஹிந்திரா வங்கியின் கிளை மேலாளர் ஆஷிஷ் குமார் மற்றும் கோயல் ஆகியோருடன் மிட்டல் இணைந்து செயல்பட்டது தெரியவந்துள்ளது” என்றனர்.