காஷ்மீர் இடைத்தேர்தலில் வாக்குச்சாவடிகளுக்கு தீ வைப்பு, வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 7 இளைஞர்கள் பலி

காஷ்மீர் இடைத்தேர்தலில் வாக்குச்சாவடிகளுக்கு தீ வைப்பு, வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 7 இளைஞர்கள் பலி
Updated on
2 min read

காஷ்மீர் மாநிலத்தில் இடைத்தேர் தலை சீர்குலைக்க ஒரு கும்பல் வாக்குச் சாவடிகளை சூறையாடியது. மேலும் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கர கல்வீச்சில் ஈடுபட்டது. கும்பலைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7 பேர் இறந்தனர்.

காஷ்மீர் மாநிலம் பத்காம் மாவட்டத்தில் உள்ள தலைநகர் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. வரும் 12-ம் தேதி அனந்த்நாக் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தல்களைப் புறக்கணிக் கும்படி மக்களை பிரிவினைவாத அமைப்புகள் மிரட்டி வருகின்றன. தேர்தலை நிறுத்தும்படி இளைஞர் களையும் பிரிவினைவாத அமைப்பு கள் தூண்டி விட்டன.

இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை ஸ்ரீநகர் தொகுதிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. அப்போது பத்காம் மாவட்டம் சரார் இ ஷெரீப் பகுதியில் உள்ள பக்கர்போராவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்குள் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாதுகாப்புப் படையினர் மீது திடீரென கல்வீச்சில் ஈடுபட்டனர். மேலும் வாக்குச் சாவடிக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். பெட்ரோல் குண்டுகளை வீசி வாக்குச் சாவடி களை கொளுத்தினர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

காஷ்மீரில் கலவரம், வன்முறை ஏற்படும் போது, ‘பெல்லட்’ குண்டு களைப் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தி வந்தனர். அந்த வகை குண்டுகளைப் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது. அதனால், பாதுகாப்புப் படையினரிடம் பெல்லட் குண்டுகள் இல்லை. எனவே, தேர்தல் அமைதியாக நடக்க அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று பாதுகாப்புப் படையினர் வேண்டு கோள் விடுத்தனர். எனினும், கலவர கும்பல் தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்டது.

இதையடுத்து வானத்தை நோக்கிப் பாதுகாப்புப் படையினர் பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரித்தனர். எனினும் கும்பல் கலையாமல் வன்முறையில் ஈடு பட்டது. இதையடுத்துப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கும்பலை கலைத்தனர். இதில் முகமது அப்பாஸ் (20), பைசான் அகமது ராதர் (15) ஆகிய 2 இளைஞர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 6 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தனர்.

இதேபோல் ரட்சுனா பீர்வா பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட வர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் நிசார் அகமது என்பவர் பலியானார். மேலும் குல்மார்க்கின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் மகாம் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அடில் பரூக் என்பவர் உயிரிழந்தார்.

பிற்பகல் நடந்த வன்முறையில் துப்பாக்கிச் சூட்டுக்கு பீர்வா பகுதியில் அகுய்ப் வானி என்பவர் பலியானார். மேலும் சதூரா சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 2 வாக்குச் சாவடிகளில் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியதால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. பத்காம் மாவட்டத்தில் 70 சதவீத வாக்குச் சாவடிகளில் வன்முறை நிலவியதால் வாக்குப் பதிவு நடை பெறவில்லை. இங்கு தவுலத்புரா பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட வர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஷபீர் அகமது, அமீர் மன்சூர் ஆகிய 2 பேர் பலியாயினர்.

ஸ்ரீநகர், பத்காம், கந்தர்பால் ஆகிய 3 மாவட்டங்களில் பல வாக்குச் சாவடிகளை வன்முறை கும்பல் சூறையாடியது. இதனால் பதற்றம் நிலவுகிறது. கந்தர்பால் பகுதியில் இருந்த வாக்குச் சாவடிகளை கலவரக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதையடுத்து கலவரக்காரர்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினருக்கு உதவியாக ராணுவம் வரவழைக் கப்பட்டுள்ளது. கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரக்காரர் களை ஒடுக்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீநகர் தொகுதி யில் மொத்தம் 12.61 லட்சம் வாக் காளர்கள் உள்ளனர். ஆனால், 6.5 சதவீதம் மட்டுமே வாக்குப் பதிவானது. இதனால் ஸ்ரீநகர் இடைத்தேர்தல் கேள்விக் குறியாகி உள்ளது.

பரூக் கண்டனம்

ஸ்ரீநகர் இடைத்தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த நசீர் என்பவர் போட்டியிடுகிறார். ‘‘இடைத்தேர்தலை சுமுகமாக நடத்துவதில் முதல்வர் மெகபூபா முப்தி அரசு முழுவதுமாகத் தோல்வி அடைந்துவிட்டது’’ என்று பரூக் அப்துல்லாவும், அவரது மகன் உமர் அப்துல்லாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in