உ.பி. பேரவைத் தேர்தல் பிரச்சாரகர்கள்: பாஜக 2-வது பட்டியலில் வருண் காந்தி, மனோகர் ஜோஷி

உ.பி. பேரவைத் தேர்தல் பிரச்சாரகர்கள்: பாஜக 2-வது பட்டியலில் வருண் காந்தி, மனோகர் ஜோஷி
Updated on
1 min read

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக பாஜக வெளியிட்ட நட்சத்திர பேச்சாளர்களின் முதல் பட்டியலில் இடம்பெறாத வருண் காந்தி, முரளி மனோகர் ஜோஷி, வினய் கட்டியார் உள்ளிட்ட தலைவர்கள் 2-வது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. வரும் 11-ம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடைசிக் கட்டத் தேர்தல் மார்ச் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஒவ்வொரு கட்டத் தேர்தலுக்கும் பாஜக வேட் பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்பட 40 தலைவர்கள் கொண்ட நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதற்கான முதல் பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டது. அதில் வருண் காந்தி, முரளி மனோகர் ஜோஷி, வினய் கட்டியார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில், 2-வது பட்டியல் அண்மையில் தேர்தல் ஆணையத் திடம் வழங்கப்பட்டது. அதில் விடுபட்ட முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் பிப்ரவரி 19 மற்றும் 23-ம் தேதிகளில் நடைபெறும் 3-வது மற்றும் 4-ம் கட்டத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். பட்டிய லில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கல்ராஜ் மிஸ்ரா, ஸ்மிருதி இரானி, உமா பாரதி, அருண் ஜேட்லி ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன. தவிர நகைச்சுவை நடிகர் ராஜூ வத்ஸ்தவா, நடிகை ஹேமமாலினி பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in