

இந்திய ராணுவத்துக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாக ‘ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா’ அமைப்பின் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்பினரை கைது செய்யக்கோரி பெங்களூருவில் ஏபிவிபி அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா என்னும் மனித உரிமை அமைப்பு பெங்களூருவில் உள்ள யுனைட்டெட் தியாலஜிக்கல் கல்லூரியில் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக கருத்தரங்கம் ஒன்றை கடந்த சனிக்கிழமை நடத்தியது. மூத்த பத்திரிகையாளர்கள் சீமா முஸ்தபா, ஆர்.கே.மட்டூ மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் காஷ்மீரில் நடைபெற்றுவரும் சண்டையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில் பேசிய காஷ்மீர்வாசிகள், “இந்திய ராணுவம் மனித உரிமை மீறல் களை அரங்கேற்றி வருகிறது. அப்பாவி காஷ்மீர் மக்களை துன் புறுத்தி வருகிறது. இந்திய ராணுவத் தின் மனிதத் தன்மையற்ற போக்கி னால் ஏராளமானோர் உயிரிழந் துள்ளனர்'' என குற்றம் சாட்டினர்.
அப்போது காஷ்மீரை சேர்ந்த சில இளைஞர்கள் இந்திய ராணு வத்துக்கு எதிராக முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து ஜெ.சி.நகர் போலீஸார், கருத்தரங்கை நடத்திய ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா மற்றும் இந்திய ராணுவத்துக்கு எதிராக கோஷம் எழுப்பிய, அடையாளம் தெரியாத நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 142, 143,147,124ஏ,153ஏ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் பெங்களூருவில் நேற்று கர்நாடக பாஜக இளைஞர் அணியினரும், ஏபிவிபி மாணவர் அமைப்பினரும் ஆம்னஸ்ட்டி அமைப்பை கண்டித்து போராட் டத்தில் குதித்தனர். அந்த அமைப் பினரை கைது செய்யக்கோரி யும், அமைப்புக்கு தடைவிதிக்கக் கோரியும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மைசூரு வங்கி சதுக்கம், ஆளுநர் மாளிகை, காவல் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆளுநர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன் றனர்.இதைத்தொடர்ந்து 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர். இந்த போராட்டத்தினால் பெங்களூருவில் முக்கிய இடங் களில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆம்னஸ்டி விளக்கம்
இதனிடையே ஆம்னஸ்டி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக் கையில்,
“எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் யாரும் இந்திய அரசுக்கோ, இந்திய ராணுவத் துக்கோ எதிராக முழக்கம் எழுப்பவில்லை. கருத்தரங்கில் இரு தரப்பினரிடமும் ஆக்கப்பூர்வமான விவாதம் நடந்தது''என விளக்கம் அளித்துள்ளது.