

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம், நாட்டு மக்கள் மீது பொருளாதார தீவிரவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி கட்டவிழ்த்து விட்டுள்ளார் என, மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டதை தொடக் கத்தில் இருந்தே உறுதியாக எதிர்த்து வருகிறார் மம்தா பானர்ஜி.
மேலும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் பாதகமான விளைவுகள் குறித்து மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ளவும் கட்சி யினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மிட்னாபூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளையாட்டுப் போட்டிகள் நிகழ்ச்சியில் மம்தா கலந்துகொண் டார். அப்போது விளையாட்டுத் துறையைச் சேர்ந்த 553 பேருக்கு மாநில அரசு வேலை வழங்கப் படுவதாக மம்தா அறிவித்தார்.
பின்னர் பேசிய மம்தா பானர்ஜி, ‘கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், சாதாரண மக்கள் சொல்ல முடியாத அவஸ் தைகளை அனுபவித்து வருகின்ற னர். 10 கோடி பேர் வேலையிழந் துள்ளனர். நாட்டு மக்கள் மீது பொருளாதார தீவிரவாதத்தை பிரதமர் மோடி கட்டவிழ்த்து விட்டுள்ளார்’ என்றார்.