

மும்பையில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி ஒரு சிறுவன் தனது தந்தையின் காரை ஒட்டிச் சென்றுள்ளான். அந்த காரில் அவரது நண்பனும் (மைனர்) சென்றுள்ளான். காரை அதிவேகமாக ஓட்டியதில் அந்தேரி பகுதியில் விபத்தில் சிக்கியது. இதில் இருவரும் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக காரை ஓட்டிய சிறுவனுக்கு எதிராக போலீஸார் வழக்கு தொடுத்தனர்.
இந்நிலையில் இரு சிறுவர்களின் பெற்றோரும் தங்களுக்குள் சமரசம் செய்துகொள்ள தீர்மானித்து வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுவை நீதிபதி நரேஷ் பாட்டீல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “இந்த காரின் உரிமையாளர், மைனர் என்று தெரிந்தும், ஓட்டுநர் உரிமம் பெறாத வர் என்று தெரிந்தும் தனது மகனை கார் ஓட்ட அனுமதித் துள்ளார். இதனால் உடன் சென்ற வேறு சிறுவனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காரின் உரிமை யாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.