இத்தாலி வீரர் தாயகம் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி

இத்தாலி வீரர் தாயகம் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இத்தாலி கடற்படை வீரர் லட்டோர் தனது சொந்த நாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு கேரளாவை ஒட்டிய கடற்பகுதியில் இரண்டு மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில், இத்தாலி கடற்படை வீரர்கள் இருவர் கைது

செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் உள்ளனர். இவர்களில் ஒருவரான மாசிமிலியானோ லட்டோர், மூளைக்கட்டி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டு மாதம் சிகிச்சை மேற்கொள்வதற்காக இத்தாலி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இம்மனு குறித்து பதிலளிக்கும்படி, தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணையை இன்று மேற்கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, உடல் நலம் பாதிக்கப்பட்ட லட்டோர் இத்தாலி சென்று சிகிச்சை பெற 4 மாத கால அவகாசம் கொடுப்பதாகவும், இந்த காலத்தில், சாணக்யாபுரா காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடுவதிலிருந்தும் அவர் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in