

இத்தாலி நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்களை வாங்கியது தொடர்பான ஊழல் முறைகேடு விவகாரத்தில், தொழிலதிபர் கவுதம் கேதானை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
நாட்டின் மிக மிக முக்கியப் பிரமுகர்களுக்கு இத்தாலி நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர் வாங்கியதில் ரூ.3,600 கோடி ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில், தொழிலதிபர் கவுதம் கேதான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஊழல் வழக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதல் கைது நடவடிக்கை இதுவாகும். இந்த முறைகேட்டில் கவுதம் கேதானுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.