Last Updated : 28 Jun, 2019 07:43 AM

 

Published : 28 Jun 2019 07:43 AM
Last Updated : 28 Jun 2019 07:43 AM

ஜி-20 உச்சி மாநாடு இன்று தொடங்க உள்ள நிலையில் ஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பு: இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு பிர தமர் ஷின்சோ அபேவை நேற்று சந்தித்துப் பேசினார். அப் போது, இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி-20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடை பெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு சென்றுள்ளார். இந்த மாநாட்டுக்கு முன்ன தாக, பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை நேற்று சந்தித்துப் பேசினார். இது, 2-வது முறை யாக மோடி பிரதமரான பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு ஆகும்.

இந்த சந்திப்பின்போது, ஜி 20 மாநாட்டை நடத்துவதற் காக அபேவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். மேலும் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜப் பான் பேரரசர் நருஹிட்டோ முடிசூட்டு விழாவில் குடி யரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பங்கேற்பார் என்று அபேவிடம் மோடி தெரிவித்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர் களிடம் கூறியதாவது:

பழைய நண்பர்களான இரு நாட்டு பிரதமர்களின் சந்திப்பு சுமுகமாக இருந்தது. இரு தலைவர்களும் ஜி-20 உச்சி மாநாட்டில் விவா திக்க வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருதரப்பு உறவை பலப் படுத்துவது குறித்தும் ஆக்கப் பூர்வமாக, விரிவாக ஆலோ சனை நடத்தினர்.

சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம், பேரிடர் மேலாண்மை, சர்வ தேச வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகள், பருவநிலை மாற்ற பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில், தப்பி ஓடிய பொருளாதார குற்ற வாளிகளைப் பிடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி பேசி யதை அபே நினைவுகூர்ந்தார். ஊழல் ஒழிப்பு நடவடிக்கை யின் ஒரு பகுதியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ஜி-20 நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண் டும் என அபே வலியுறுத் தினார்.

இவ்வாறு அவர் தெரி வித்தார்.

புல்லட் ரயில்

பின்னர் கோபே நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். முன்னதாக நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு அவர் சென்றபோது, அங்கு கூடியிருந்த வர்கள் ‘மோடி, மோடி’ என முழக்கமிட்டு அவரை வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மோடி பேசும் போது, “இந்தியா, ஜப்பான் இடையிலான உறவு நூற்றாண்டு பழமை வாய்ந் தது. சுவாமி விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர் இருதரப்பு உறவை பலப் படுத்தினர். இந்த உறவு தொடர்ந்து வலிமை பெற்று வருகிறது.

கார் தயாரிப்பதற்காக இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டன. இப்போது புல்லட் ரயில் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. ஜப்பான் உதவியுடன் மும்பை-அகம தாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது.

இந்தியாவின் பொருளா தார வளர்ச்சியில் ஜப்பான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் ஜப்பானின் திட் டங்களோ முதலீடோ இல்லாத பகுதியே இல்லை எனலாம். அதுபோல, இந்தியாவின் மனிதவளம் ஜப் பானை வலிமைப் படுத்து வதில் முக்கிய பங்காற்றி வருகிறது” என்றார்.

ஜி-20 உச்சி மாநாட்டுக்கு நடுவே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்களையும் பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்துப் பேச திட்டமிட்டு உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x