Published : 13 Sep 2018 08:15 AM
Last Updated : 13 Sep 2018 08:15 AM

தெலங்கானா பஸ் விபத்து உயிரிழப்பு 60 ஆக உயர்வு

தெலங்கானாவில் செவ்வாய்க் கிழமை நிகழ்ந்த பஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

தெலங்கானா ஜகித்யாலா மாவட்டம், கொண்ட குட்டா அருகே பஸ் ஒன்று நேற்று முன்தினம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 25 பெண்கள், 7 சிறுவர்கள் உட்பட 56 பேர் இறந்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று மேலும் 4 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது.

இதனிடையே பல்வேறு அரசு மருத்துவமனைகளில் விடிய, விடிய பிரேதப் பரிசோதனை நடத்தி உறவினர்களிடம் சடலங் கள் ஒப்படைக்கப்பட்டன.

உயிரிழந்தோர் வசித்த சனி வாரம் பேட்டா, ஹிம்மத்ராவ் பேட்டா, ராம்நகர், தப்ப திம்மியய்ய பல்லி ஆகிய கிராமங்கள் நேற்று சோகத்தில் மூழ்கின. சிலரது குடும் பங்களில் 4 சடலங்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்தனர். தந்தை-மகன் அல்லது கணவன்-மனைவி என உடல்கள் ஒன்றாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப் பட்டன. இந்த கிராமங்களில் நேற்று எங்கு பார்த்தாலும் அழுகை யும் கண்ணீருமாக இருந்தது.

உறவினர்கள், சுற்றுப்புற கிராம மக்கள், அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் இறுதி ஊர்வலங் களில் பங்கேற்றனர்.

இதனிடையே சனிவாரம் பேட்டா கிராமத்தில் இறந்த முஸ்லிம் ஒருவரின் மகன் துபாயில் இருந்து வரவேண்டியுள்ளது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் இறந்தவரின் சடலத்தை ஐஸ் கட்டிகள் மீது வைத்து தவிடால் மூடி பாதுகாத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x