Published : 20 Sep 2018 08:54 AM
Last Updated : 20 Sep 2018 08:54 AM

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கு: இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை நாடு கடத்த ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல்

அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலி காப்டர் பேர வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை நாடு கடத்த ஐக்கிய அரபு அமீரக நாட்டைச் சேர்ந்த நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

அரசியல்வாதிகள், முக்கியப் பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக 12 ஹெலிகாப்டர்களை வாங்குவது தொடர்பாக, இத்தாலியின் பின்மெக் கனிக்கா குழுமத்தைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறு வனத்துடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

ரூ.3,700 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற் காக அந்த நிறுவனம் இந்தியர் களுக்கு 10 சதவீதம் கமிஷன் வழங்கியதாக புகார் எழுந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே இதுதொடர்பாக இத்தாலியில் தொடரப்பட்ட வழக்கில், லஞ்சம் வழங்கியதற்காக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் 2 பேருக்கு சிறைத் தண்டனை வழங் கப்பட்டது. மேலும் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பில் அறிவிக்கப்பட் டது. குறிப் பாக, அந்தத் தீர்ப்பில் இந்திய விமானப் படை தளபதியாக இருந்த எஸ்.பி.தியாகியின் பெயர் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக எஸ்.பி.தியாகி உட்பட 14 பேர் மீது சிபிஐ-யும், 21 பேர் மீது அமலாக்கத் துறையும் ஏற் கெனவே வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றன.

இதனிடையே அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ் டியன் மைக்கேல், 2008-ல் எழுதிய ஒரு கடிதத்தில், ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தின் பின்னணியில், முக்கி யக் காரணியாக, 'சிக்னோரா காந்தி' செயல்பட்டதாக, குறிப்பிட்டுள்ளது தெரியவந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே மைக்கேல்லுக்கு எதிராக அமலாக்கத்துறை 2016-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மைக்கேல் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு துபாய் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கிறிஸ்டியன் மைக்கேலை நாடு கடத்துவதற்கு துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக துபாயைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: கிறிஸ்டியன் மைக் கேலை நாடு கடத்துவதற்கு துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந் தியாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அவரை ஐக்கிய அரசு அமீரகத்திலிருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரபு மொழியில் உள்ளது. அந்தத் தீர்ப்பு விரைவில் மொழிபெயர்ப்பு செய்யப்படவுள்ளது. அதன் பிறகு முழு விவரம் தெரியவரும். இருந்த போதும் கிறிஸ்டியன் மைக்கேலை நாடு கடத்த நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது உண்மைதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x