Last Updated : 27 Sep, 2018 08:37 AM

 

Published : 27 Sep 2018 08:37 AM
Last Updated : 27 Sep 2018 08:37 AM

இந்திய மருத்துவக் கவுன்சிலை நிர்வகிக்க அவசரச் சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

இந்திய மருத்துவக் கவுன்சிலை நிர்வகிக்கும் வகையில் தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்ட குழு அமைப்பதற்கான அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.

மருத்துவக் கல்வி நிறுவனங் களின் தரத்தை நிர்ணயிக்கும் அமைப்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் விளங்கி வருகிறது. இந்த அமைப்பை கலைத்துவிட்டு, அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப் புத் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுதொடர்பான மசோதா நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட் டது. எனினும், எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாததால் அது நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

இதனிடையே, தற்போது இருக் கும் இந்திய மருத்துவக் கவுன்சி லின் காலவரையறை விரைவில் நிறைவடையவுள்ளது. இதனை முன்னிட்டு, அந்த அமைப்பினை நிர்வகிக்கும் பொருட்டு, தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்ட குழுவினை அமைக்க வழிவகை செய்யும் அவசரச் சட்டம் ஒன்றினை மத்திய அரசு இயற்றியது.

இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்ததாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இதுதொடர்பான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறும் வரை, இந்திய மருத்துவக் கவுன்சிலை இந்தப் புதிய குழு நிர்வகிக்கும் எனவும் அவர் கூறினார்.

© 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x