

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்திய வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இது தொடர்பாக ட்விட்டர் இணையதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேலும் கூறியுள்ளதாவது: “இந்தியாவையும், சீனாவையும் இணைக்கும் பாலமாக புத்த மதம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே புத்த மத பாரம்பரியம் குஜராத்தில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன அறிஞர் யுவான் சுவாங், குஜராத்தில் புத்த மடாலயங்கள் இருந்ததாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். நான் பிறந்த வட்நகரிலும் புத்த மடாலயம் இருக்கிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்திய வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
வரும் 17-ம் தேதி அகமதாபாதில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி விருந்தளிக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து டெல்லிக்கு அதிபர் ஜி ஜின்பிங் செல்லவுள்ளார்.