Last Updated : 27 Sep, 2018 03:39 PM

 

Published : 27 Sep 2018 03:39 PM
Last Updated : 27 Sep 2018 03:39 PM

காஷ்மீரில் லஷ்கர் இ தாய்பா தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி நடிவடிக்கை

 

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இன்று இரு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய திடீர் ஆபரேஷனில் லஷ்கர் இ தாய்பா தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், இரு வேறு துப்பாக்கிச் சூட்டில் சாமானியர் ஒருவரும், பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

ஆனந்த்கார்க் மாவட்டம், தூரு பகுதியில் உள்ள காசிகுண்ட் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தக் கிராமத்தை இன்றுஅதிகாலை பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றி வளைத்தனர்.

அப்போது வீரர்கள் சுற்றிவளைத்ததை அறிந்து தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்குப் பதிலடியாக பாதுகாப்பு படையினரும் சுட்டனர். இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் இ தாய்பா தீவிரவாதி ஆசிப் மாலிக் என்ற அபு உகாஷா என்பவர் கொல்லப்பட்டார்.

ஆனந்த்கார்க் மாவட்டத்தின் லஷ்கர் இ தாய்பா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் என்பதால், ஆசிப் மாலிக் கொல்லப்பட்ட செய்தி அறிந்ததும், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

மற்றொரு சம்பவமாக பதாம் மாவட்டத்தில் உள்ள பான்ஜான் கிராமத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.. இதில் இரு தீவிரவாதிகள் மசூதிக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர். நீண்ட நேரம் காத்திருந்த பாதுகாப்பு படையினர் வெளியே வந்தவுடன் துப்பாக்கிச் சண்டை நடத்தி அவர்கள் இருவரையும் கொலை செய்தனர். இந்தச் சண்டையின் பாதுகாப்பு படையினர் மசூதிக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படாத வகையில் மிகவும் கவனமாக ஆப்ரேஷனை மேற்கொண்டனர்.

தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து, அப்பகுதி மிகவும் பதற்றமாக இருந்ததால், பானிபஹால் மற்றும் பாராமுல்லா நகரங்களுக்கு இடையே இன்று இயக்கப்பட இருந்த வழக்கமான பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, வதந்திகளைப் பரப்பி கலவரத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மொபைல் இன்டர்நெட் இணைப்பையும் தெற்கு காஷ்மீர், சிறீநகர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நிறுத்திவைத்துள்ளனர்.

இதற்கிடையே சிறீநகரில் உள்ள குமாரவாரி பகுதியில் உள்ள நூர்பாக் எனும் இடத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று காலை துப்பாக்கிச் சண்டனை நடந்தது.அப்போது, அப்பகுதி சாலையில் நடந்த வந்த முகம்மது சலீம் மாலிக் என்பவர் மீது குண்டுபாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x